நிச்சயதார்த்ததிற்கு முன்தினம் தந்தையிடம் மகள் சொன்ன அந்த ஒரு வார்த்தை...! ஆத்திரத்தில் அடுத்த நொடியே வீட்டுக்குள் நடந்த அதிர்ச்சி... கதி கலங்க வைக்கும் பின்னணி..!!!
தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில், காதல் விவகாரத்தால் 19 வயது மகளைத் தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேறொரு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், நிச்சயதார்த்தத்திற்கு முந்தைய நாள் இளம்பெண் உயிரிழந்தார். அவரது மரணத்தை தற்கொலை என மறைக்க முயன்றதாகத் தந்தை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அடிலாபாத்தைச் சேர்ந்த கல்யாணி என்ற இளம்பெண்ணுக்கு குடும்பத்தினர் வேறு ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர். மறுநாள் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், தனது தாய்மாமன் மகனை காதலிப்பதாக அவர் தந்தை கைலாஸ் அதேவிடம் தெரிவித்துள்ளார் . இதைக் கேட்ட தந்தை ஆத்திரமடைந்து, மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: என்னை ஏமாத்த பாக்குறியா..? உன்ன சும்ம விடமாட்டேன்! காதலன் வீட்டு மொட்டை மாடியில் ஏறி 21 வயது பெண் தற்கொலை மிரட்டல்! ஷாக் வீடியோ!!!
காதல் விவகாரத்தால் தந்தை ஆத்திரம்
தனது காதல் குறித்து மகள் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த தந்தை, அவரைக் கொலை செய்த நிலையில், இந்த விவகாரம் குடும்பத்துக்குள் நடந்ததாக முதலில் வெளியில் தெரியவில்லை. கல்யாணி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி மரணத்தை மறைக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அவசரமாக இறுதிச் சடங்குகளையும் நடத்தி முடித்துள்ளனர். நிச்சயதார்த்தத்திற்கு முந்தைய நாளில் இளம்பெண் திடீரென உயிரிழந்ததும், இறுதிச் சடங்குகள் அவசரமாக நடைபெற்றதும் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சந்தேகத்தைத் தொடர்ந்து காவல்துறை விசாரணை
இளம்பெண்ணின் மரணம் குறித்து எழுந்த சந்தேகங்கள் காரணமாக விவகாரம் காவல்துறையினரின் கவனத்துக்குச் சென்றுள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காதல் விவகாரத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: உன் மகனை கொலை பண்ணு... இல்லையேல் நிர்வாணமாக வீதியில் நட...! காதலால் தந்தை, மகனுக்கு நேர்ந்த கொடூரம்.. பகீர் பின்னணி..!!!