நம்பவே முடியல..! வயிற்று வலியால் துடிதுடித்த சிறுவன்! ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன மருத்துவர்கள்..! வினோத சம்பவம்..!!!



telangana-boy-found-with-uterus-mullerian-duct-syndrome

தெலங்கானாவில் வயிற்று வலியால் மருத்துவமனைக்குச் சென்ற சிறுவனின் உடலில் கர்ப்பப்பை இருப்பது ஸ்கேன் பரிசோதனையில் கண்டறியப்பட்ட சம்பவம் மருத்துவத்துறையில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டு சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் சிறுவனின் உடலில் இருந்த கர்ப்பப்பையை வெற்றிகரமாக அகற்றினர்.

ஸ்கேன் பரிசோதனையில் கண்டறியப்பட்ட கர்ப்பப்பை

தெலங்கானாவைச் சேர்ந்த சிறுவனுக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டதால், பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், சிறுவனின் வயிற்றில் பெண்ணின் கர்ப்பப்பை போன்ற இனப்பெருக்க உறுப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதையும் படிங்க: அடிஆத்தி..! எவ்வளவு பெருசு... விவசாய நிலத்தில் பதுங்கியிருந்த 12 அடி நீளமும், 12 கிலோ எடையும் கொண்ட ராட்சத ராஜநாகம்..! பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன விவசாயி.. திக் திக் வீடியோ..!!!

இதையடுத்து மருத்துவர்கள் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அவரது உடலில் இருந்த கர்ப்பப்பையை வெற்றிகரமாக அகற்றினர்.

Mullerian Duct Syndrome என்ற அரிய நிலை

மருத்துவத்துறையில் இந்த நிலை 'Mullerian Duct Syndrome' என அழைக்கப்படுகிறது. இது ஆண் குழந்தைகளில் பெண் இனப்பெருக்க உறுப்புகளின் சில அமைப்புகள் உடலில் உருவாகக் காரணமாகும் அரிய மரபியல் சார்ந்த நிலையாகும். இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டவர்களின் உடலில் கர்ப்பப்பை உள்ளிட்ட உறுப்புகள் காணப்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதையும் படிங்க: அம்மாடியோவ்... எவ்வளவு பணம்..! எம்எல்ஏ வீட்டு திருமணத்தில் வாரி இறைத்த பணக்கட்டுகள்..! கைகளால் அள்ள முடியாமல் கடைசியில் அவர்கள் செய்த அந்த ஒரு காரியத்தை பாருங்க... வைரல் வீடியோ..!!!