தலை விரித்தாடும் சித்திரவதை... கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவன்! திருமணமான 19 நாட்களில் பி.டெக் மாணவி எடுத்த விபரீத முடிவு! நெஞ்சை உலுக்கும் சோகம்...!!!



telangana-dowry-harassment-student-pallavi-dies

தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பி.டெக் மாணவி பல்லவி, திருமணமான சில நாட்களிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் கூடுதல் வரதட்சணை கேட்டு உடலளவிலும் மனதளவிலும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பல்லவி, தான் படித்து வந்த கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

திருமணத்துக்கு 19 நாட்களிலேயே வரதட்சணை கொடுமை

கட்டேபல்லி கிராமத்தைச் சேர்ந்த எனுகு மதுசூதன் ரெட்டியின் மகள் பல்லவி. கட்கேசர் காவல் எல்லைக்குட்பட்ட கொம்முரி பிரதாப் ரெட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி, சைதன்யபுரி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் ஸ்ரீகாந்த் ரெட்டியுடன் அவருக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர்.

இதையும் படிங்க: தலைமை ஆசிரியை கொடூர கொலை.. மாணவர்கள் அரங்கேற்றிய வெறிச்செயல்.. காரணம் என்ன? 

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு ஸ்ரீகாந்த் ரெட்டி, பல்லவியை உடலளவிலும் மனதளவிலும் துன்புறுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவரின் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

கல்லூரி 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவி

இந்நிலையில், கல்லூரியில் இருந்த பல்லவி 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஜீடிமெட்லாவில் உள்ள நீலிமா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மேடிபல்லியில் உள்ள ஸ்ரீ கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பல்லவியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாய் புகாரில் போலீசார் விசாரணை

பல்லவியின் மரணம் தொடர்பாக அவரது தாய் சந்தியா போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கட்கேசர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணை மூலம் வரதட்சணை கொடுமை குறித்த புகார் மற்றும் பல்லவி தற்கொலைக்கு முயன்றதற்கான காரணங்கள் குறித்து முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

 

இதையும் படிங்க: என் மகளை உன்கூட அனுப்ப மாட்டேன்! மாமனாருக்கும் மருமகனுக்கும் தகராறு.. தடுக்க வந்த மனைவியின் மூக்கை கிள்ளி எரிந்த கணவன்! பகீர் சம்பவம்..!!!