ஆசையாக ட்ரஸ் போட்டு, பலூன் கட்டி 5 வயது மகளை தந்தை செய்த கொடூரம்! சிக்கிய 3 பக்க கடிதம்... தேடி வந்த மச்சான் கண்ட அதிர்ச்சி காட்சி!!!
குஜராத் மாநிலம் அம்ரிலி மாவட்டத்தில் கடன் பிரச்சினையால் கட்டுமான மேற்பார்வையாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதுடன், தனது 5 வயது மகளையும் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தந்தையும் மகளும் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் அதிர்ச்சியளித்த காட்சி
அம்ரிலி மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் தனுக் (40), கட்டுமான மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மஞ்சுபின் தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த கிஷோரின் சகோதரர், அறையில் கிஷோர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதையும், அவரது 5 வயது மகள் ஹிமன்ஷி பிரிட்ஜுக்குள் சடலமாக இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
3 கடிதங்களில் கடன் பிரச்சினை குறித்து தகவல்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை ஆய்வு செய்தனர். அப்போது கிஷோர் எழுதி வைத்திருந்ததாக கூறப்படும் 3 கடிதங்கள் சிக்கின. அவற்றில் தனக்கு அதிகளவில் கடன் இருப்பதாகவும், தொழில் கூட்டாளிகள் தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தராததால் கடும் நிதி நெருக்கடியில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதன் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
பிறந்தநாள் கொண்டாட்டம் போல் அலங்கரிக்கப்பட்ட அறை
மகளை கொல்வதற்கு முன்பு கிஷோர் புதுத்துணி அணிவித்து, அறையை பலூன்களால் அலங்கரித்திருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது உடல் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்தது. தான் இறந்த பிறகு தாய் இல்லாத நிலையில் மகள் சிரமப்படுவார் என கருதியதால் இந்த முடிவை எடுத்ததாக கடிதத்தில் கிஷோர் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.