தமிழகம் இந்தியா Covid-19

பறிபோனது 2வது உயிர்..! கொரோனாவால் தமிழகத்தில் மேலும் ஒருவர் மரணம்.

Summary:

Tamil Nadu corono second death registered

கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சிங்காரத்தோப்பை சேர்ந்த 51 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவில் இருந்து தப்பிக்க அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 7 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மதுரையை சேர்ந்த ஒருவர் உயிர் இழந்துள்ளார். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த சிங்காரத்தோப்பை சேர்ந்த 51 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனோவால் பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.


Advertisement