தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..! மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்வு.!

Tamil Nadu corono positive current count


tamil-nadu-corono-positive-current-count

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் புதிதாக 86 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு  உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளராக்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் கூறுகையில், இதுவரை 90,824 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 127 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், 10,814 பேருக்கு 28 நாட்கள் கண்கானிப்பு முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

corono

இதுவரை மொத்தம் 4,612 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்றுவரை 485 ஆக இருந்த பாதிப்பு இன்று 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து 571 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும், ஒருவர் துபாய் சென்று திரும்பியவர் என்றும் சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா பாதித்து இதுவரை 8 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.