இந்தியா

அதிர்ச்சி.. கொரோனா சோதனைக்காக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் தற்கொலை!

Summary:

Suspected corono patient suicide at delhi

டெல்லி ஷாப்டர்ஜங் மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் சோதனைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் சோதனை செய்யப்படுகின்றனர். சந்தேகத்தின் பேரில் இருப்பவர்கள் அடுத்தகட்ட சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

அவ்வாறே இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து டெல்லியின் இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த தன்வீர் சிங் என்பவரை ஷாப்டர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது சோதனை இன்னும் முழுமையடையவில்லை. 

இந்நிலையில் அவர் இன்று இரவு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தகவலினை உதவி ஆணையர் தேவேந்தர் ஆர்யா தெரிவித்துள்ளார்.


Advertisement