இருசக்கர வாகனத்தில் சென்ற செவிலியர் துடிதுடித்து பலி... மின் கம்பி அறுந்து விழுந்ததால் நேர்ந்த சோகம்.!staff-nurse-was-died-in-an-electric-accident-in-karnata-XUGB9S

கர்நாடக மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் மீது மின் கம்பி  அறுந்து விழுந்ததால் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள சின்சலாகட்டே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபாய் ஜாதவ். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவர் தும்கூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 22 ஆம் தேதி மாலை தனது பணி முடிந்து சென்று கொண்டிருந்தார்.

Indiaஅப்போது தும்கூர் மாவட்டத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் லட்சுமணன் என்பவர் லட்சுமிபாயின் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வீட்டில் இறக்கி விடுவதாக கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து லட்சுமி பாயும் தலைமை ஆசிரியருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள மின்கம்பி ஒன்று அறுந்து இவர்கள் மேல் விழுந்திருக்கிறது.

Indiaஇதனை தொடர்ந்து இவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்ததால் இருவரும் அலறி துடித்துள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லட்சுமிபாய் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் தலைமை ஆசிரியர் லட்சுமணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்