அரசியல் இந்தியா

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மரணம்! சோகத்தில் மூழ்கிய தமிழர்கள்!

Summary:

srilanka minister arumugan thondaman died

இலங்கை அமைச்சரும் இந்திய வம்சாவளி தமிழர்களின் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். இந்த செய்தியை அறிந்த அனைத்து அரசியல் கட்சியினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்தவர் ஆறுமுகன் தொண்டமான். இவருக்கு தற்போது 56 வயதாகிறது. இவருக்கு திடீரென உடல்நிலை கோளாறு ஏற்பட்ட நிலையில், இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான ஆறுமுகன் தொண்டமான், தற்போது தோட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது டுவிட்டர் பக்கத்தில், "இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement