சாப்பாடு லேட்டானதால் தாயை அடித்துக் கொன்ற 17 வயது மகன்!

சாப்பாடு லேட்டானதால் தாயை அடித்துக் கொன்ற 17 வயது மகன்!


Son killed mother for late food

பெங்களூர் அருகே சாப்பாடு சமைக்க லேட்டானதால் மகன் தனது தாயை இரும்பு கம்பியால் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபர் காலமாக கொலை கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு சிறு விஷயங்களுக்கு கூட அடிக்கடி முதல் கொலை முயற்சி வரை நடந்து வருகிறது.

Late food

அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காலை உணவு தாயார் சமைத்துக் கொண்டிருந்த நிலையில், இவ்வளவு தாமதமாகத்தான் சமைப்பாயா என்று கேட்ட மகன் தனது தாயை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர் தனது தாயை கொலை செய்து விட்டதாக மனம் வருந்திய அந்த மகன் போலீசில் சரணடைந்துள்ளார். பள்ளிக்கு தாமதமானதால் தாய் மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தாயை கொலை செய்ததாக கூறியுள்ளார்.

Late food

இதனையடுத்து 17 வயது சிறுவனை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகனே தாயை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.