அதிர்ந்தது கேரளா... 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை... கைதான வடமாநில தொழிலாளர்.!shocking-in-kerala-5-year-old-girl-raped-and-murdered-b

கேரள மாநிலத்தில் ஐந்து வயது சிறுமியை கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வடமாநில தொழிலாளர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா பகுதிக்கு அருகே உள்ள  தைகட்டுக்காரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் காணாமல் போனார். இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர்.

Indiaஇந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் 20 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சிறுமியின் சடலத்தை பெரியாறு ஆற்றங்கரையிலிருந்து மீட்டனர். சிறுமியின் உடலில் பல்வேறு பகுதிகளில் காயங்கள் இருந்ததோடு அந்தரங்க உறுப்பு சேதப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்ததும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

Indiaஇதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு  விசாரணை நடத்திய காவல்துறையினர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்பாக் அகமது என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது  இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து வயது சிறுமி வட மாநில தொழிலாளியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது