AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
சிறுமி கர்ப்பம்... மது போதையில் தந்தை செய்த கொடூரம்.!!
நீலகிரி மாவட்டத்தில் சொந்த மகளை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த 40 வயது நபர் அங்குள்ள தனியார் நிறுவனமொன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இளைய மகள் பள்ளியில் படித்து வந்துள்ளார். அந்த நபருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மது அருந்தி விட்டு வந்த தந்தை தனது இளைய மகளை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவரது தாய் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளார். அப்போது மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அட கொடுமையே... +2 மாணவிக்கு பாலியல் டார்ச்சர்.!! கணக்கு டீச்சர் கைது.!!
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், மகளிடம் விசாரித்ததில் தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை கூறி அழுதிருக்கிறார். இதுகுறித்து சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர். தந்தை தனது மகளை கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: "பாப்பா ட்ரெஸ்ஸ கழட்டி அங்கிள் ஏதோ செய்றாரு..." 8 வயது சிறுமி பலாத்காரம்.!! 44 வயது நபர் கைது.!!