இந்தியா

பள்ளி சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பாத 12ம் வகுப்பு மாணவி! தேடி சென்ற பெற்றோர் கண்ட அதிர்ச்சி காட்சி.!

Summary:

12ம் வகுப்பு மாணவியை 5 பேர் கொண்ட கும்பல் போதை மருந்து கொடுத்து பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12ம் வகுப்பு மாணவியை 5 பேர் கொண்ட கும்பல் போதை மருந்து கொடுத்து பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குருஷேத்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 22-ஆம் தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அவர் பள்ளி முடிந்து ஆங்கில வகுப்புக்கு சென்றுவருவது வழக்கம். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அந்த மாணவி வீட்டுக்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமி பயின்றுவரும் ஆங்கில வகுப்பில் சென்று விசாரித்துள்ளனர்.

ஆனால் மாணவி வகுப்பிற்கு வரவில்லை என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் மாணவியை தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்றனர்.

அப்போது, வழியில் ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் அந்த சிறுமியை நடுவில் அமர வைத்து அவரின் தலையில் நாட்டுத்துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு செல்வதை பார்த்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து தனது மகளை மீட்டு பின்னர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். விசாரணையில், சம்பவத்தன்று மாணவி தனது நெருங்கிய தோழியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

அங்கு அவருக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து தோழியின் உறவினரான நபர் ஒருவர்,
அந்த பெண்ணை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி மோட்டார் சைக்கிளின் அழைத்து சென்றுள்ளார். பின்னர் மாணவிக்கு போதை மருந்து கொடுத்து 4 பேர் சேர்ந்து பாலியல் கொடுமை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை போலீசார்  தேடி வருகின்றனர்.


Advertisement