இந்தியா

எப்படி நடந்தது..? உரிமையாளரின் உயிரைப் பறித்த சேவல்..! தெலுங்கானாவில் நடந்த பரபரப்பு சம்பவம்..

Summary:

தெலங்கானாவில் உரிமையாளரின் உயிரை பறித்த சேவலை போலீசார் சிறை பிடித்துள்ளனர்.

தெலங்கானாவில் உரிமையாளரின் உயிரை பறித்த சேவலை போலீசார் சிறை பிடித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஜக்டியல் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ். இவர் தனது வீட்டில் சேவல் சண்டைக்காக சேவல் ஒன்றை வளர்த்துவந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் அவரது பகுதியில் நடந்த சேவல் சண்டை ஒன்றுக்கு, தனது சண்டை சேவலுடன் சென்றுள்ளார் சதீஷ்.

போட்டிக்கு தயாராகிக்கொண்டிருந்தபோது, சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி எதிர்பாராத விதமாக சதீஷின் இடுப்பில் கிழித்துள்ளது. இதில் சதீஷ் உயிரிழந்தார். இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சேவலையும் அதன் காலில் கட்டப்பட்ட கத்தியையும் நீதிமன்றத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக சேவலை காவல்நிலையம் அழைத்துவந்து பாதுகாத்து வருகின்றனர்.

சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி கிழித்து, நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement