துப்பாக்கி முனையில் மிரட்டி பலாத்காரம்; தொண்டு நிறுவன நிர்வாகி கைது...!

துப்பாக்கி முனையில் மிரட்டி பலாத்காரம்; தொண்டு நிறுவன நிர்வாகி கைது...!


Rape at gunpoint; Charity organization executive arrested...

மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வரும் 38 வயது நபரை, பாலியல் வன்கொடுமை வழக்கில் கொங்கான் காவல்துறையினர் கைது செய்தனர்.

கொங்கான் காவல்துறை இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பவார் இதுகுறித்து கூறுகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துலேயில் நடந்த நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன தலைவர் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெணிடம் நட்பு கொண்டார்.

அதன் பின்னர் அந்த பெண்ணை மும்பைக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிவாண்டி மற்றும் கல்யாண் பகுதிகளில் இருக்கும் லாட்ஜ்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து சித்திரவதை செய்துள்ளார். 

மேலும், அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. தற்போது குற்றம் சாட்டப்பட்ட தொண்டு நிறுவன  தலைவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்று கூறினார்.