ஐயோ... எப்படி தான் மனசு வந்துச்சோ...! பிறந்த 2 மணி நேரத்தில் வீசப்பட்ட பிஞ்சு குழந்தை…12 வருட தவிப்பு! என்கிட்ட தாங்க..நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!



rajasthan-baran-newborn-baby-rescued

ராஜஸ்தான் மாநிலம் பாரான் நகரில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன ஆண் குழந்தை சாலையோரம் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. SKG தொழிற்சாலை அருகே காயங்களுடன் உயிருக்குப் போராடிய குழந்தையை லாரி ஓட்டுநர் ஒருவர் கவனித்தார். உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததால், பிஞ்சு உயிர் காப்பாற்றப்பட்டது.

சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை

SKG தொழிற்சாலை அருகே உள்ள சாலையில் குழந்தை ஒன்று கிடப்பதை அவ்வழியாகச் சென்ற லாரி ஓட்டுநர் பார்த்துள்ளார். பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில், காயங்களுடன் கிடந்த பச்சிளம் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தாமதிக்காமல் குழந்தையை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

இதையும் படிங்க: பெண்ணின் தில்லாலங்கடி வேலை... முகத்தை மூடி குழந்தையைக் கடத்தி ஓட்டம் பிடித்த பெண்! இறுதியில் நடந்த பெரிய ட்விஸ்ட்.... சிக்கிய சிசிடிவி காட்சி!!!

தத்தெடுக்க முன்வந்த குடும்பங்கள்

குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதும், அதை தத்தெடுத்து வளர்க்க பல குடும்பங்கள் அங்கு வந்தனர். இதில் 12 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து வந்த ஒரு தம்பதியினரும் இருந்தனர். குழந்தையைப் பார்த்த அவர்கள் கண்ணீர் மல்க, அதை தத்தெடுத்து வளர்க்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தாயை தேடும் போலீசார்

தற்போது குழந்தை நலக்குழுவின் பராமரிப்பில் உள்ள குழந்தை நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, குழந்தையை சாலையோரம் வீசிச் சென்ற தாயை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள தகவல்கள் மற்றும் கிடைக்கக்கூடிய ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தை மீட்பு தொடர்பான இந்த விவகாரத்தில், குழந்தையை யார் அங்கு விட்டுச் சென்றது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க கூடாது! குழந்தைகளைப் பத்திரமா பாத்துக்கோங்க... வீட்டிற்கு வந்ததும் கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு!வி அதிர்ச்சி சம்பவம்!!!