சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை; 5 நாட்கள் மனவிரக்தியில் விபரீத முடிவு.!

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை; 5 நாட்கள் மனவிரக்தியில் விபரீத முடிவு.!


Pondicherry Pakoor SSI Traffic Cop Suicide 


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாகூர் பகுதியில் வசித்து வருபவர் சரவணன் (வயது 56). இவர் சிறப்பு எஸ்எஸ்ஐ ஆவார். தற்போது, புதுச்சேரி தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஐந்து நாட்களாகவே திடீரென பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த சரவணன், இன்று திடீரென வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில், மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த பாகூர் காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.