18 வயது வித்தியாசமுள்ள பெண்ணுடன் திருமணம்.. திருமணமான 6 மாதத்தில் தற்கொலை.!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சண்முகபுரம், சுப்பிரமணியர் கோவில் பகுதியில் வசித்து வருபவர் இராஜேந்திரன் (வயது 42). இவர் பாண்லேவில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ஜெயா (வயது 24). தம்பதிகள் இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
சம்பவத்தன்று கணவன் - மனைவி இருவரும் கோவிலுக்கு சென்று வந்த நிலையில், ராஜேந்திரன் வீட்டின் வராண்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக ஜெயா கணவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியுடன் வந்த ராஜேந்திரனின் தங்கை கலையரசி மற்றும் குடும்பத்தார், அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர். ராஜேந்திரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக ராஜேந்திரனின் தங்கை கலையரசி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கணவன் தற்கொலை செய்த பதற்றம் கூட இல்லாமல் ஜெயா இயல்பாக இருந்ததாகவும், அவரின் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.