இந்தியா Covid-19

இறந்த தாயின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்த்த காவலர்.! லீவு கொடுத்தும் போகல..! அவர் சொன்ன கண்கலங்க வைத்த காரணம்..!

Summary:

Police officer did not go to mothers funeral due to corono

கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், அவருக்கு விடுமுறை கொடுக்கப்பட்டும் இறந்துபோன தாயின் இருந்து சடங்கிற்கு செல்லாமல் இருந்த சம்பவம் அனைவரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தீவிரமாக பரவிவரும் கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ஷாண்டராம் என்பவர், கடந்த வாரம் விஜயவாடா ரயில்வே ஸ்டேசன் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார்.

அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசியவர், ஷாண்டராம்மின் தாய் சீதாமகாலட்சுமி (69) உடல்நலக்குறைவால் மரணமடைந்ததாக தெரிவித்துள்ளனர். தாய் இறந்த செய்தியை ஷாண்டராம் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க, அவர்களும் உடனே விடுப்பு கொடுத்து ஷாண்டராமை தாயின் இறுதி சடங்கிற்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.

ஆனால், ஷாண்டராம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், நான் எனது தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவேண்டும் என்றால் 4 மாவட்டம், 40 ஷெக்போஸ்டுகளை தாண்டி செல்ல வேண்டும். அங்கு சென்றதும் பலருடன் உரையாடவேண்டி வரும். இதனால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. அதனால் நான் போகவில்லை என கூறியுள்ளார்.

மேலும், தனது சகோதரரிடம் கூறி, தாயின் இறுதி சடங்கை பார்த்துக்கொள்ளுமாறு கூறியதாகவும், இறுதி சடங்கு நிகழ்வுகளை தொலைபேசி மூலம் வீடியோ காலில் பார்த்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். கொரோனா பரவ வாய்ப்புள்ளதால், தாயின் இறுதி சடங்கிற்கு கூட செல்லாமல் பணியாற்றிவரும் காவலரின் இந்த செயல் அனைவரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement