பிரசவ வார்ட்டில் நடந்த கொடூரம்...! மகளுக்காக 15 முதல் 20 முறை தாய் கதறியும் அலட்சியமாக இருந்த மருத்துவர்கள்..! துடிதுடித்து இறந்த 25 வயது இளம்பெண்..! கலங்க வைக்கும் வீடியோ!!!
ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள அரசு சிவில் மருத்துவமனையில், பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 25 வயது இளம்பெண் கிரண் உயிரிழந்தார். மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், அவருக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் வழங்கப்படவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன் கேட்டு தாய் கதறல்
கிரணுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை பார்த்த அவரது தாய் பதற்றமடைந்தார். உடனடியாக ஆக்ஸிஜன் வழங்குமாறு அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் பலமுறை கேட்டதாக கூறப்படுகிறது. 15 முதல் 20 முறைக்கும் மேல் நேரில் சென்று முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வார்டிலேயே உயிரிழந்த இளம்பெண்
நிலைமை மோசமடைந்த நிலையில், கிரண் மருத்துவமனை வார்டிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சரியான நேரத்தில் தேவையான சிகிச்சையும் ஆக்ஸிஜன் வசதியும் கிடைத்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்
மகளின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனதால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பானிபட் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் அவசர சிகிச்சை வசதிகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இதையடுத்து, மருத்துவ அலட்சியம் தொடர்பான புகாரை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
पानीपत के सिविल अस्पताल की लेबर वार्ड में एक महिला की मौत के बाद परिजनों ने हंगामा किया।
— मिच्च मसाला (@micchamasala) September 24, 2026
परिजनों के मुताबिक महिला को ऑक्सीजन की जरूरत थी। उसकी मां करीब 15 से 20 बार डॉक्टरों के पास जाकर ऑक्सीजन देने के लिए कहती रही, लेकिन आरोप है कि समय पर ऑक्सीजन नहीं दी गई।
इसके बाद महिला की… pic.twitter.com/yj9V2xMmZL