அத்துமீறி இந்திய எல்லையில் போதை பொருள்களுடன் நுழைந்த பாகிஸ்தானிய படகு; சுற்றி வளைத்த காவல் படையினர்...!



pakistani-boat-trespassing-on-indian-border-with-drugs

அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய படகில் இருந்து கடலில் வீசிய ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருள் இந்திய காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தின் கட்சி பகுதியில் கடந்த மே 30 ஆம் தேதி இரவில் பாகிஸ்தானிய படகு ஒன்று அத்துமீறி இந்திய எல்லை பகுதிக்குள் நுழைந்தது. 

அதனை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படை மற்றும் குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டது.

இந்திய படையினரை பார்த்த படகில் இருந்த பாகிஸ்தானியர்கள் படகில் இருந்த 50 கிலோ போதை பொருட்களை  கடலில் வீசினர். படகில் இருந்த 7 பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

கடலில் வீசப்பட்ட போதை பொருட்களை தேடும் பணி நடந்தது. இதில், ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.