#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
கொரோனா நோயாளியின் செல்போனை பயன்படுத்திய செவிலியருக்கு நேர்ந்த பரிதாபம்!

ஹரியானாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளியின் செல்போனை பயன்படுத்திய செவிலியருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 9 லட்சத்திற்கும் மேலும் இந்தியாவில் 1900க்கும் மேலானோரும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் உயிரிழப்பு 47 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவரை கண்கானித்து வந்த செவிலியருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் மொத்தம் 2 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் ஒரு நபரை கண்கானித்து வந்த அந்த செவிலியர் நோயாளியின் செல்போனை பயன்படுத்தியுள்ளார். தற்போது அந்த செவிலியருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர், "பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் மட்டும் கொரோனா பரவியிருக்காது, இதற்கு வேறு காரணம் இருக்கலாம்" என கூறியுள்ளார்.