உச்சி வெய்யிலில் 800 கி.மீட்டர் தெலங்கானா டு சத்தீஸ்கர் லாரியில் பயணம்..! தண்ணீர், உணவு இல்லாமல் தவித்த தொழிலார்கள்.!No Food No Water Migrants Packed In Truck

கொரோனா ஊரடங்கு சமயத்தில் வெளிமாநிலங்களில் மாட்டிக்கொண்ட வெளிமாநில தொழிலார்கள் சிலர் உச்சி வெயிலில் குழந்தைகளுடன் டிப்பர் லாரியில் பயணம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு மூன்றாம் கட்டமாக வரும் மே 17 வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் வேலைநிமித்தமாக பிரமாநிலங்களுக்கு சென்ற வெளிமாநில தொழிலார்கள் வேலையும் இழந்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்பவும் முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் பலரும் பல நூறு கிலோமீட்டர் தொலைவை நடந்தும், மிதிவண்டியில் கடந்தனர். இதனால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்நிலையில் இதுபோன்ற வெளிமாநில தொழிலார்களுக்கு உதவ வேண்டும் என பலதரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை எழுந்தது. இதனை அடுத்து வெளிமாநில தொழிலார்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க அரசு சிறப்பு ரயில்களை ஏற்பாட்டு செய்து அனுப்பி வருகிறது.

இந்நிலையில், இதுபோன்ற உதவி பெரும்பாலான தொழிலார்களுக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 100 தொழிலார்கள் ஆந்திராவில் இருந்து டிப்பர் லாரியில் சுமார் 800 கி.மீ. பயணம் செய்துள்ளன்னர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இதுபோன்ற வண்டிகளில் பின்புறம் பிளாஸ்டிக் கவர் போடப்பட்டிற்கும். ஆனால், நாங்கள் சென்ற வண்டியில் அதுபோன்ற கவர் கூட இல்லை. சுமார் நான்கு நாட்களாக இந்த உச்சி வெய்யிலில் குழந்தைகளை வைத்துக்கொண்டு நான்கு நாட்கள் பயணம் செய்ததாக கூறியுள்ளனர்.

அதேநேரம் லாரியில் பயணம் செய்யும் போது தங்களுக்கு தண்ணீரோ, உணவோ கிடைக்கவில்லை எனவும், சத்தீஸ்கர் அரசு எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை, அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.