இப்படியா நடக்கணும்! குழந்தைக்கு பாலூட்டும் போது உறங்கிய தாய்...! மடியிலிருந்து நழுவி ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த 9 மாத குழந்தை! அலாரச் சங்கிலியை இழுக்க விடாமல் தடுத்த பயணிகள்! பகீர் சம்பவம்..!!
டெல்லியில் இருந்து பீகாருக்கு சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெற்றோருடன் சென்ற 9 மாத ஆண் குழந்தை, உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது. ஃபைசுல்லாபூர் ரயில் நிலையம் அருகே இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. சுமார் 23 மணி நேர தேடுதலுக்குப் பிறகு குழந்தையின் உடலை ரயில்வே போலீசார் மீட்டனர்.
தாயின் மடியிலிருந்து நழுவிய குழந்தை
டெல்லியைச் சேர்ந்த மோகன் குமார் - காஜல் தம்பதியினர், தங்களது 9 மாத ஆண் குழந்தையுடன் சொந்த ஊரான பீகாருக்கு சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஃபைசுல்லாபூர் ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, குழந்தைக்கு தாய் காஜல் பாலூட்டியபடியே தூங்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணிக்கு நடந்த அதிர்ச்சி! 50 மீட்டர் தூரம் தரதரவென இழுத்து செல்லப்பட்ட பயங்கரம்.... பகீர் வீடியோ!!!
அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை அவரது மடியிலிருந்து நழுவியது. ரயிலின் அவசரக்கால ஜன்னல் வழியாக வெளியே விழுந்ததாக தெரிகிறது. சிறிது நேரத்துக்குப் பிறகு கழிப்பறையில் இருந்து திரும்பிய மோகன் குமார், குழந்தை காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
சங்கிலியை இழுக்க முயன்ற தந்தை
குழந்தை ரயிலில் இருந்து விழுந்திருக்கலாம் என சந்தேகித்த மோகன் குமார் உடனடியாக ரயிலின் அவசரக்கால சங்கிலியை இழுக்க முயன்றார். ஆனால், அந்த பகுதி அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் சக பயணிகள் அவரைத் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து பிரயாக்ராஜ் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல் பணியை தொடங்கினர்.
23 மணி நேரத்துக்குப் பிறகு உடல் மீட்பு
அடர்ந்த புதர்கள் மற்றும் தேங்கிய நீர்நிலைகள் நிறைந்த பகுதியில் போலீசார் தீவிரமாக தேடினர். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, ஃபைசுல்லாபூர் ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள புதரில் இருந்து குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சுமார் 23 மணி நேரம் நடைபெற்ற தேடுதல் பணிக்குப் பிறகு உடல் மீட்கப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை நடவடிக்கையிலும் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையின் பெற்றோர் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். ரயில் பயணத்தின்போது நடந்த இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.