கொரோனா எதிரொலி.. இனி ATM- ஐ பயன்படுத்த புதிய கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் மூடி சீல் வைக்கப்படும்!

கொரோனா எதிரொலி.. இனி ATM- ஐ பயன்படுத்த புதிய கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் மூடி சீல் வைக்கப்படும்!



new rules to use atm ahead of corono

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சமூக விலகலை கடைபிடிக்க வேண்டி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மிகுந்த பாதுகாப்புடன் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் மக்கள் வெளியில் வரலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தங்கள் தேவைகளுக்கான பணத்தினை எடுக்க மக்கள் அதிகமாக வங்கி மற்றும் ATM களில் கூடுகின்றனர்.

Corono virus

அதிலும் ATM இயந்திரத்தை தொடாமல் நிச்சயம் யாராலும் பணம் எடுக்க முடியாது. எனவே ATM இயந்திரங்கள் மூலம் கொரோனா பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே தற்போது ATM களை பயன்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதாவது ஒரு நபர் ATM ஐ பயன்படுத்திய பிறகு கிருமிநாசினியை கொண்டு முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு தான் மற்றொருவர் ATM இயந்திரத்தை தொட வேண்டும். மேலும் நகராட்சியின் மூலம் நாளுக்கு இரண்டுமுறை ATM இருக்கும் இடத்தை சுற்றி கிருமி நாசினியை தெளிக்க வேண்டும். இவைகளை முறையாக பின்பற்றாவிட்டால் ATM அறைக்கு சீல் வைக்கப்படும் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.