டெல்லியில் உள்ள பெண்ணுக்கு மும்பையில் இருந்து தாலி கட்டிய மாப்பிளை.! வெளிநாடுகளில் இருந்து மலர் தூவிய உறவினர்கள்..!



Mumbai boy ties knot with Delhi girl online

அதிகரித்துவரும் கொரோனா காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசும், அணைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே இருக்கும்படி அரசு அறிவுறுத்திவருகிறது.

அரசின் இந்த அதிரடியால் ஊரடங்கு சமயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு திருமணங்கள் தடைபட்டுள்ளது, சில திருமணங்கள் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுவருகிறது. சில திருமணங்கள் மிகவும் வித்தியாசமாக வீடியோ கால் மூலம் கூட நடைபெறுகிறது.

corono

அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த 29 வயதான வணிகக் கடற்படை அதிகாரியான ப்ரீத் சிங் என்பவருக்கும் டில்லியை சேர்ந்த நீத் கவுர் என்ற பெண்ணுக்கும் வீடியோ கால் மூலமாக நடைபெற்ற திருமணம் நடந்து முடிந்துள்ளது.

கடந்த 4 ஆம் தேதி இவர்கள் திருமணம் நடைபெற இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மணமக்களின் உறவினர்கள் பல்வேறு நாடுகளில் சிக்கிக்கொள்ள, மணமக்களும் வேறு வேறு பகுதிகளில் இருந்ததால், அனைவரும் வீடியோ கால் மூலம் ஓன்று சேர்ந்து இந்த திருமணத்தை நடத்தி முடித்துவைத்துள்ளனர்.