ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த காதலி! லாரி முன்பு பாய்ந்த காதலன். ஒரு பகீர் சம்பவம்.

மும்பையை சேர்ந்தவர் விஜயகுமார். 24 வயதான இவர் 22 வயதான சந்தியா என்பவரை காதலித்துவந்துள்ளார். இவர்களது காதலை ஏற்றுக்கொண்ட பெற்றோர் இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்துள்னனர்.
இந்நிலையில் சந்தியாவுக்கு வேறொரு இளைஞருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட விஜயகுமார் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி சந்தியாவை ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்து சென்று அங்கு இருவரும் அறை எடுத்து தங்கியுள்னனர்.
இதனை அடுத்து, தனது காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு விஜயகுமார் அங்கிருத்து தப்பித்துள்ளார். அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால் சந்தேகப்பட ஹோட்டல் ஊழியர்கள் மாற்று சாவியை வைத்து அறையை திறந்துள்ளனர்.
அங்கு சந்தியா சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனிடையே, தனது காதலியை கொலைசெய்துவிட்டு தப்பித்து சென்ற விஜயகுமார் வேகமாக வந்த லாரி ஒன்றில் விழுது தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததில் அவரின் கால் மட்டும் முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளன்னர்.