இரண்டு பக்கமும் காரு..! நடுவுல காக்கி யூனிபார்முடன் ஸ்டெயிலா ஏறிநின்ற காவல்துறை அதிகாரி.! கடைசியில நடந்த விபரீதம்.!MP police stunt on car video goes viral

சினிமா பாணியில் இரண்டு கார்களுக்கு நடுவே நின்றுகொண்டு ஸ்டண்ட் செய்த காவல்துறை அதிகாரிக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சினிமா என்றாலே நம்பமுடியாத அளவிற்கு ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெறுவது வழக்கமான ஓன்று. அதிலும் காவல்துறை அதிகாரி வேடம் என்றால் சொல்லவே தேவை இல்லை. கற்பனை செய்துபார்க்க முடியாத காட்சிகள் கூட ஸ்டண்ட் என்ற பெயரில் சினிமாவில் இடம்பெறும்.

Mysterious

இதுபோன்ற சினிமா காட்சிகளை பார்த்து, அதன் ஈர்ப்பில் சிலர் நிஜத்திலும் நடந்துகொள்ள முயற்சிப்பது வழக்கம். அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் மனோஜ் யாதவ் என்ற காவல்துறை அதிகாரி, பாலிவுட்டில் பிரபல நடிகர்களில் ஒருவரான அஜய் தேவ்கனின் தீவிர ரசிகர்.

ஒருபடத்தில் அஜய் தேவ்கன் இரண்டு கார்களுக்கு இடையே நின்றுகொண்டு வருவதுபோல் காட்சி இருக்கும். இதனை பார்த்த மனோஜ் யாதவ் தானும் அதுபோல செய்ய ஆசைப்பட்டு, காவல்துறை சீருடையுடன், இரண்டு கார்களுக்கு நடுவே நின்றுகொண்டு வருவதும், ஸ்டெயிலாக கூலிங் கிளாஸ் போடுவதுமாக வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து சம்மந்தப்பட்ட துறை சார்பாக மனோஜ் யாதவ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரின் தலைமை பொறுப்பு பறிக்கப்பட்டதோடு, சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக ஐந்தாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.