மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
தாயின் தவறான நடத்தையை கண்டித்த 30 வயது மகனை கொலை செய்த கொடூர தாய்
டெல்லியில் தனது ஆண் நண்பருடன் தவறான உறவில் இருந்து வந்த தாயை கண்டித்த 30 வயது மகனை ஆண் நண்பருடன் சேர்ந்து தாயாரே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தை சேர்ந்த 30 வயது நிரம்பிய ரவீந்தர் பதக் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு இவர் தன்னுடைய தாய் மற்றும் தாயின் ஆண் நண்பர் அஜித் ஆகியோருடன் டெல்லி நியூ அசோக் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்.
கடந்த சனிக்கிழமை இரவு வேலையை விட்டு வீடு திரும்பினார் பதக். அப்போது வீட்டில் அவரது தாயார் அவருடைய ஆண் நண்பருடன் தவறான உறவில் இருந்துள்ளார். இதனைக் கண்ட பதக் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே இந்த பிரச்சனை கைகலப்பு வரை சென்றுள்ளது.
அப்போது பதக்கின் தாயார் அங்கு இருந்த செங்கல்லால் பதக்கின் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட பதக் மயங்கி விழுந்து விட்டார். ரத்தவெள்ளத்தில் மிதந்த அவர் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து அஜித் ஆம்புலன்சை வரவழைத்துள்ளார். ஆம்புலன்ஸ் டிரைவர் வீட்டிற்குள் வரும்பொழுது பதக் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்துள்ளார்.
அவர்கள் இறந்து போன பதக்கின் உடலை எடுத்துக்கொண்டு ஆசாடபூரில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு தகனம் செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு இவர்கள் மேல் சந்தேகம் அடைந்த அவரின் சகோதரி உடலை திருப்பி எடுத்துச் செல்லுமாறு அவர்களிடம் வற்புறுத்தியுள்ளார். அதன் பின்னர் மீண்டும் அசோக் நகருக்கு உடலை எடுத்து வந்த பதக்கின் தாயார் மற்றும் அவரது நண்பர் அஜித்தை போலீசார் கைது செய்தனர்.