தமிழகம் வந்த மோடி கையில் வைத்திருந்த கருவி என்ன? பலருக்கும் எழுந்த கேள்வி! மோடியே கொடுத்த விளக்கம்!

தமிழகம் வந்த மோடி கையில் வைத்திருந்த கருவி என்ன? பலருக்கும் எழுந்த கேள்வி! மோடியே கொடுத்த விளக்கம்!


modi in beach


பாரத பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அங்கு ஏராளமான நிகழ்ச்சிகள் நடந்தன. இதனையடுத்து சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று கோவளம் சென்றார்.

 அப்போது பிரதமர் மோடி நட்சத்திர விடுதி அருகே உள்ள கடற்கரை பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு கரையோரம் ஒதுங்கிய பிளாஸ்டிக் குப்பைகளை கைகளால் அள்ளி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.

அந்த வீடியோவில் மோடி கையில் ஏதோ கருவி ஒன்றை வைத்திருந்தார். அது என்ன கருவி என்று பலருக்கும் கேள்வியும் எழுந்தது. இந்தநிலையில், அந்தக் கேள்விக்கு பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதில் தெரிவித்துள்ளார். 

அவரது டுவிட்டர் பக்கத்தில், மகாபலிபுரம் கடற்கரையில் நான் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, என் கையில் வைத்திருந்த கருவி குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். அது, நான் அடிக்கடி பயன்படுத்தும் அக்குபிரஷர் ரோலர் கருவி. அது, எனக்கு மிகவும் உதவியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அக்குபிரஷர் ரோலர் கருவி என்பது இரத்த அழுத்ததை கட்டுப்படுத்த உதவும் கருவி ஆகும்.