தமிழகம் சினிமா

மதுவால் புற்று நோயில் சிக்கி மீண்ட பிரபல தமிழ் நடிகை.!

Summary:

manisha koirala tamil and bollywood movies famous actor

மதுவுக்கு அடிமையாகி அதனால் ஏற்பட்ட புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தேன் என்று பிரபல நடிகை மனீஷா கொய்ராலாவின் சுயசரிதையில் வெளியான தகவல் இந்திய சினிமாவையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பம்பாய் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா. இப்படம் வெற்றிபெற்ற நிலையில் இந்தியன், முதல்வன், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.

Related image

1990 களின் மத்தியில் பாலிவுட் சினிமா உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் பக்கம் திரும்பினார்.

இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் தற்போது தமிழ், ஹிந்தி படங்களில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

Image result for manisha koirala

தற்போது இவர், ஹீல்டு: புது வாழ்வு கொடுத்த கேன்சர்’ என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இதை பென்குயின் பதிப்பகம் அச்சிட்டு விற்பனைக்காக வெளியிட்டுள்ளது. 

அதில், ’தீராத குடிப்பழக்கத்தினால் தான் எனக்கு கேன்சர் ஏற்பட்டது. நண்பர்கள், முன்னாள் காதலர் என பலரும் எச்சரித்தும் என்னால், குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. கேன்சரால் பாதிக்கப்பட்ட நாட்கள் அவ்வளவு கொடுமையானது என்றாலும், கேன்சர் என் வாழ்க்கையின் பரிசாகவே கருதுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். 

கேன்சர் பாதிப்பில் இருந்தபோது தான் எதிர்க்கொண்ட சவால்கள் குறித்தும் அந்த புத்தகத்தில் மனிஷா கொய்ராலா பகிர்ந்துள்ளார். 


Advertisement