பட்ட பகலில் கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! பபகீர் வீடியோ ..!!!
கர்நாடக மாநிலம் மங்களூருவில் மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி ஒருவர் வலுக்கட்டாயமாக தார் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பட்டப்பகலில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மாணவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்லூரி வளாகத்திற்குள் மாணவிக்கு நடந்த கொடூரம்
மங்களூருவில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி ஒருவர் தார் வாகனத்தில் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பாதுகாப்பு வசதிகள் உள்ள கல்லூரி வளாகத்திலேயே இத்தகைய சம்பவம் நடந்ததால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதையடுத்து, சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
காதல் தொடர்பு காரணமா? போலீசார் விசாரணை
மாணவி இந்து இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் இருந்ததாகவும், அதன் பின்னணியில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாணவியின் பாதுகாப்பு மற்றும் அவரை பத்திரமாக மீட்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்குள் நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மாணவியை மீட்க போலீசார் தீவிரம்
கடத்தப்பட்டதாக கூறப்படும் மாணவியை உடனடியாக மீட்டு பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும் என்பதே தற்போது முக்கியமாக உள்ளது. அதேபோல், கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவியை அழைத்துச் சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
मंगलुरु मेडिकल कॉलेज कैंपस से छात्रा के अपहरण का मामला, VIDEO वायरल!
कर्नाटक के मंगलुरु में एक मेडिकल कॉलेज परिसर से छात्रा को कथित तौर पर जबरन थार गाड़ी में बैठाकर ले जाने का मामला सामने आया है घटना का वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है
बताया जा रहा है कि छात्रा एक… pic.twitter.com/muYFRVimkx— Sahil chabra (@sahii199) November 21, 2026