இது இப்ப ரொம்ப முக்கியமோ? மனிதநேயமற்ற இளைஞனின் கேவலமான செயலால் ஆத்திரமடைந்த மீட்புப்பணி வீரர்கள்.!

இது இப்ப ரொம்ப முக்கியமோ? மனிதநேயமற்ற இளைஞனின் கேவலமான செயலால் ஆத்திரமடைந்த மீட்புப்பணி வீரர்கள்.!



man-misbehaviour-to-take-selfie-with-helicopter

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து  பெய்து வருவதால் நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

மேலும் மழை வெள்ளம் சூழ்ந்து ஏராளமான வீடுகள் இடிந்து,விவசாய பயிர்களும் மழையால் நாசமடைந்துள்ளது.

இவ்வாறு பெருகி ஓடும் வெள்ளத்தால்மற்றும் நிலச்சரிவால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது.மேலும் வெள்ளத்தில் சிக்கி பலரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

selfie

இனிக்கையில் மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் குழு, இந்தியக் கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இதற்கிடையே  மீட்புப்பணியின்போது வெட்கக்கேடான ஒரு சம்பவமும் நடந்துள்ளது. 

நேற்று  கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று மீட்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வீட்டின் மொட்டை மாடியில் இளைஞர் ஒருவர் தனது சட்டையை கழற்றி ஹெலிகாப்டரை நோக்கி சுழற்றியுள்ளார். 

இதைப் பார்த்த விமானி உதவி கேட்கிறார் என எண்ணி கஷ்டப்பட்டு வீட்டின் மொட்டை மாடியின் அருகே ஹெலிகாப்டரை இறக்கினார். ஹெலிகாப்டர் அருகே வந்ததும் அந்த இளைஞர்  ஹெலிகாப்டருடன் செல்ஃபி எடுத்துவிட்டு விமானியை நோக்கிச்  செல்லுமாறு கைக்காட்டியுள்ளார்.

     இதைப் பார்த்த விமானி அதிர்ச்சியடைந்து அந்த இளைஞரை எச்சரித்துவிட்டு ஹெலிகாப்டரை மீண்டும் மேலே எழுப்பி கிளப்பினார். 

selfie

இது குறித்து கடற்படை விமானி கூறுகையில், இத்தகைய செயல்  எங்களுக்கு வேதனை அளிக்கிறது. இதுபோன்ற 
சூழ்நிலையில் அனைவரும் மனித தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஹெலிகாப்டரை இயக்க தேவையான எரிபொருள், நேர விரயம் குறித்து யோசிக்க வேண்டும்.

அந்த இடத்தில் தரை இறங்காமல் இருந்து இருந்தால், பிற இடங்களில் சிக்கி கொண்டிருக்கும் மக்களை நாங்கள் வேகமாக மீட்டு இருப்போம்.இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.