துயரத்தில் முடிந்த சந்திப்பு... காதலியை கொன்று தற்கொலை செய்த காதலன்.!!



man-kills-lover-commits-suicide-police-brings-out-truth

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காதலன் வீட்டில் ஆளில்லாத போது தனிமையில் சந்தித்துக் கொண்ட காதலர்களிடையே ஏற்பட்ட தகராறில் காதலியை கொலை செய்துவிட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சடலங்களை கைப்பற்றிய காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள அடிமாலி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவலோஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இந்நிலையில் சிவலோஷ் குடும்பத்தினர் வெளியூருக்கு சென்றுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காதலன் மற்றும் காதலி இருவரும் தனிமையிலிருக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் சிவலோஷின் நண்பர் அவரது வீட்டில் சென்று பார்த்தபோது சிவலோஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார்.மற்றொரு அறையில் அவரது காதலி மயங்கிய நிலையில் இறந்து கிடந்திருக்கிறார்.

India

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா.? அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் மர்மம் உள்ளதா.? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

இதையும் படிங்க: "காதல் படுத்தும் பாடு..." 60 வயது முதியவர், இளம் பெண் தற்கொலை.!! காவல் துறை விசாரணை.!!

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் சிவலோஷ் தனது காதலியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது. தனிமையில் சந்தித்த காதல் ஜோடி இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது அப்போது ஆத்திரமடைந்த சிவலோஷ் தனது காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: "இதுக்காகவா கல்யாணம் பண்ணினோம்..." அம்மாவுடன் சென்ற காதல் மனைவி.!! இளைஞர் எடுத்த விபரீத முடிவு.!!