ரயிலில் திடீரென ஏற்பட்ட புகைமூட்டம்., அலறியடித்து ஓடிய பயணிகள்!! கழிவறையில் காத்திருந்த ட்விஸ்ட்டு!! Man firing Cigarette in Train causes fogy situation

ந்தே பாரத் ரயில் திருப்பதியில் இருந்து புறப்பட்டு செகந்திராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த சமயத்தில் ஒரு நபர் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்ய ஏறியுள்ளார். மேலும் டிடிஆரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க ரயில் பெட்டியில் உள்ள கழிவறையில் அமர்ந்து பயணம் செய்து உள்ளார்.

இப்படியே வெகு நேரமாக கழிவறையில் பயணம் செய்து கொண்டிருந்த அந்த நபர் சிகரெட் பிடிப்பதற்காக சிகரெட்டை பத்த வைத்துள்ளார்.அதன்பின் சிகரெட்டில் இருந்து வெளிவந்த புகை கழிவறையை விட்டு வெளியே வந்து பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதியில் பரவியுள்ளது.

புகை வேகமாக ரயில் முழுவதும் பரவியதால் அங்கு பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை கருவியின் அலாரமடிக்க துவங்கியுள்ளது. உடனே ரயிலில் பொருத்தப்பட்டிருந்த நீர் தெளிப்பான்கள் செயல்பட்டு நீர் தெளிக்க துவங்கியுள்ளது. இச்சம்பவத்தால் பதற்றம் அடைந்த பயணிகள் இங்குமங்கும் ஓடி உள்ளனர்.

இதனை தொடர்ந்து புகை வந்த பெட்டிக்குள் நுழைந்த காவல்துறையினர் அங்கு கழிவறையில் அமர்ந்து சிகரெட் பிடித்திருந்த அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பின்னர் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரயில் பெட்டியில் சூழ்ந்து இருந்த புகையை வெளியேற்றி உள்ளனர். இச்சம்பவத்தால் பயணிகள் இடையே பதற்றம் நிலவியது.