இந்தியா

இந்த பாம்புதான் சார் என்ன கடிச்சது!! கையில் பாம்புடன் வந்த இளைஞர்!! அரண்டுபோன மருத்துவர்கள்!! பரபரப்பு வீடியோ காட்சி..

Summary:

தன்னை கடித்த பாம்பை கையோடு பிடித்துவந்து இளைஞரால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற

தன்னை கடித்த பாம்பை கையோடு பிடித்துவந்து இளைஞரால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகா மாநிலம் பல்லாரி மாவட்டம் கம்புளி தாலுகா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது அங்கிருந்த புதர் ஒன்றில் இருந்து வெளிய வந்த பாம்பு அந்த இளைஞரை கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர், உடனே அந்த பாம்பை கைகளால் பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

பின்னர் மருத்துவர்களின் சென்று, இந்த பாம்பு தன்னை கடித்துவிட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இளைஞர் பாம்புடன் வந்ததை பார்த்ததும் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் பிற நோயாளிகள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த மருத்துவருக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டது.

சிகிச்சை வழங்கும்போது கூட அந்த இளைஞர் அந்த பாம்பை கீழே விடவில்லை. கீழே விட்டால் அந்த பாம்பு வேறு யாரையாவது கடித்துவிடுமோ என்ற பயத்தில் அந்த இளைஞர் அந்த பாம்பை தனது கைகளால் இறுக்கி பிடித்துக்கொண்டார். பின்னர் அங்கிருந்த சென்ற அந்த இளைஞர் அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement