சுற்றுலாவில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்த கடைசி நிமிடம்... ஆசிரியர்கள் கண்முன்னே துடிதுடித்து உயிரை இழந்த 8 சிறுவர்கள்! நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்...!!!
மகாராஷ்டிராவின் புனே அருகே அலண்டியைச் சேர்ந்த தனியார் பயிற்சி மைய மாணவர்கள் சுற்றுலா சென்றபோது சோகமான சம்பவம் நடந்துள்ளது. ராய்காட் மாவட்டம் திவேகர் கடற்கரையில் கடலில் குளிக்கச் சென்ற 8 மாணவர்கள் அலைகளில் சிக்கி உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்த மீட்புக் குழுவினர், மாலை 5 மணிக்குள் 8 பேரின் உடல்களையும் மீட்டனர்.
ஆசிரியர்கள் எச்சரித்தும் கடலுக்குள் சென்ற மாணவர்கள்
அலண்டியில் செயல்படும் தனியார் பயிற்சி மையத்தில் இருந்து 42 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்கள் ராய்காட் மாவட்டத்தில் உள்ள திவேகர் கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தனர். வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், 16 வயதுடைய மாணவர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்துள்ளனர்.
ஆசிரியர்கள் எச்சரித்தபோதும் சில மாணவர்கள் ஆழமான பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எழுந்த பெரிய அலையில் 8 மாணவர்கள் சிக்கினர். எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய அவர்கள் கரைக்குத் திரும்ப முடியாமல் உயிரிழந்தனர்.
வாட்டர் ஸ்கூட்டர் மூலம் தீவிர தேடுதல்
மாணவர்கள் கடலில் சிக்கிய தகவல் கிடைத்ததும், உள்ளூர் வாட்டர் ஸ்போர்ட்ஸ் கிளப் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். வாட்டர் ஸ்கூட்டர்களை பயன்படுத்தி கடலில் தேடுதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணியில், மாலை 5 மணிக்குள் 8 மாணவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அலண்டியில் கடைகள் அடைப்பு
மாணவர்களின் உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் சுநேத்ரா பவார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஒரே இடத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் உயிரிழந்ததால் அலண்டி பகுதியில் சோகம் நிலவியது. இதையடுத்து அங்குள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: காதலி ஆசையை நிறைவேற்ற இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்! நள்ளிரவில் காரை வளைத்து பிடித்த போலீஸ்கு காத்திருந்த பேரதிர்ச்சி... பகீர் சம்பவம்!!!