இப்படி பண்ணிடீங்களே..! ஆசையா அம்மாவுக்கு ஐஸ்கிரீம் ஊட்டிய குழந்தை! ஒரே வாயில் ஒட்டுமொத்தத்தையும் சாப்பிட்ட தாய்... கதறி அழுதுகொண்டே குழந்தை செய்த காரியத்தை பாருங்க...!!!



child-feeds-ice-cream-to-mother-viral-video

தாய்க்கு ஆசையாக ஐஸ்கிரீம் ஊட்டச் சென்ற சிறு குழந்தை, அடுத்த நொடியே ஏமாற்றத்தில் கதறி அழுத காட்சி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அம்மா விளையாட்டாக ஐஸ்கிரீம் முழுவதையும் சாப்பிட்டுவிட்ட நிலையில், குழந்தை கண்ணீருடன் செய்த அடுத்த செயல் நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது.

அம்மாவுக்கு ஐஸ்கிரீம் ஊட்டிய குழந்தை

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், குழந்தை தனது கையில் வைத்திருந்த ஐஸ்கிரீமை மிகவும் அன்புடன் தாயின் வாயருகே கொண்டு செல்கிறது. குழந்தை ஊட்டுவதை எதிர்பார்த்திருந்த தாய், விளையாட்டாக ஒரே வாயில் ஐஸ்கிரீம் முழுவதையும் சாப்பிட்டுவிடுகிறார்.

இதையும் படிங்க: அழுது கொண்டிருந்த தாய்... பிறந்தது முதல் பார்வை இன்றி தவித்த குழந்தை! சிகிக்சைக்கு பிறகு முதன்முறையாக தாயின் முகத்தை பார்த்து குழந்தை செய்த அந்த ஒரு செயல்.... அழகிய காட்சி!!!

பின்னர் குழந்தையின் கையில் ஐஸ்கிரீம் குச்சி மட்டுமே எஞ்சுகிறது. தான் ஆசையாக வைத்திருந்த ஐஸ்கிரீம் முழுவதும் இல்லாமல் போனதை உணர்ந்ததும், அந்தச் சிறுவன் முகம் சோகமாக மாறுகிறது. ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழத் தொடங்குகிறது.

அழுதபடியே குப்பைத்தொட்டியில் போட்ட குச்சி

ஆனால் அழுகையிலும் குழந்தை தனது கையில் இருந்த வெறும் ஐஸ்கிரீம் குச்சியை கீழே வீசவில்லை. அருகில் இருந்த குப்பைத்தொட்டியை நோக்கிச் சென்று, அந்தக் குச்சியை அதில் முறையாகப் போட்டுவிட்டு திரும்புகிறது. சிறிய வயதிலேயே குழந்தை காட்டிய இந்த ஒழுக்கம் வீடியோவைப் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நெட்டிசன்கள் பாராட்டு

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. ஐஸ்கிரீம் கிடைக்காத ஏமாற்றத்தில் குழந்தை அழுதாலும், குப்பையைத் தரையில் போடாமல் குப்பைத்தொட்டியில் சேர்த்ததைப் பலரும் பாராட்டி வருகின்றனர். “அழுகையிலும் இவ்வளவு ஒழுக்கமா?” எனக் குழந்தையின் செயலை ரசித்து நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: SeeEx நேரலையிலையே இப்படியா? இரவில் பிரபல ஸ்டீரீமர் டிரைகோ பெண்ணை அடித்து, பால் பாட்டிலால் தாக்கிய கொடூரம்! தீயாய் பரவும் வீடியோ..!!!