நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
15 வயது சிறுமி கத்தி முனையில் கடத்தல், பலாத்காரம்... 22 வயது இளைஞன் கைது.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மலாட், திந்தோஷி பகுதியில் 15 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று, சிறுமி தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்றுள்ளார். அப்போது, சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞன் கத்தி முனையில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
பின்னர், சிறுமியிடம் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என்று மிரட்டி அனுப்பி வைக்கவே, வீட்டிற்கு வந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். இதனைக்கேட்டு பதறிப்போன பெற்றோர், சிறுமி கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரனை கைது செய்ய 3 தனிப்படை அமைத்திருந்தனர். தனிப்படை காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு, அங்குள்ள நலசோப்ரா பகுதியில் பதுங்கியிருந்த 22 வயது இளைஞனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.