ஆம்புலன்சுக்கு பணமும் இல்ல., அமரர் ஊர்தியும் இல்ல.. தாயின் உடலை விறகுடன 80 கி.மீ பைக்கிலேயே எடுத்துசென்ற மகன்..! கண்கலங்கவைக்கும் சம்பவம்..!!

ஆம்புலன்சுக்கு பணமும் இல்ல., அமரர் ஊர்தியும் இல்ல.. தாயின் உடலை விறகுடன 80 கி.மீ பைக்கிலேயே எடுத்துசென்ற மகன்..! கண்கலங்கவைக்கும் சம்பவம்..!!


madhya pradesh son mother sad scene

உயிரிழந்த தாயின் உடலை கொண்டு செல்ல பணம் இல்லாமல், மகன் பைக்கிலேயே உடலை எடுத்த சென்ற பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஹ்டோல் மாவட்டத்தில் மகன் ஒருவர் உடல்நிலை சரியில்லாத தனது தாயை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி தாய் உயிர் இழக்கவே, கதறியழுத மகன் ஆம்புலன்ஸ் மூலமாக தாயின் உடலை கொண்டு செல்ல முடிவெடுத்தார்.

Madhya pradesh

ஆனால் தனியார் ஆம்புலன்ஸில் 5000 ரூபாய் கட்டணத்தை செலுத்த வசதி இல்லாததாலும், அரசு அமரர் ஊர்தி கிடைக்காததாலும் தனது தாயின் சடலத்தை பைக்கிலேயே கட்டி எடுத்து சென்றுள்ளார். 

கிட்டத்தட்ட 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தனது கிராமத்திற்கு தாயின் சடலத்தோடு, எரிப்பதற்கு விறகையும் வாங்கி கட்டி எடுத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.