
கைக்குழந்தையுடன் பயணம் செய்தால் படுக்கை வசதி.. அசத்தும் இரயில்வே துறை.!
கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் தாய்மார்களுக்காக, ரயில்களில் குழந்தை படுக்கை வசதியை ரயில்வேதுறை அறிமுகப்படுத்தியுள்ளது.
அன்னையர் தினத்தை முன்னிட்டு வடக்கு ரயில்வேதுறை லக்னோ மெயில் ரயிலில் முன்பதிவு பெட்டியில், 'தாயுடன் குழந்தையும் படுத்து உறங்குவதற்கு வசதியாக குழந்தைக்கு தனியாக படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது' என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், இதில் பிரத்தியேகமாக சிறிய அளவிலான குழந்தைக்கு என்று தனியாக பெர்ட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தை உருண்டு விழாமல் இருப்பதற்காக சீட்டில் ஒரு இரும்புக் கம்பியும் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இதனை சோதனை அடிப்படையில் சில குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக படிப்படியாக அனைத்து ரயில்களிலும் இம்முறை செயல்படுத்தப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement