வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
14 ஆவது மாடியில் இருந்து குதித்து மருத்துவர் தற்கொலை.. அலறல் சத்தத்தால் பேரதிர்ச்சி.. பரிதாபம்.!!
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி, புல்லாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் இப்ராஹிம். இவரின் மனைவி ஜார்ஜ் ஆபிரஹாம். இந்த தம்பதிகளின் மகள் ரேஷ்மா ஆபிரகாம். இவர் மருத்துவர் ஆவார்.
ரேஷ்மா ஆபிரகாம் கொச்சியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் நிலையில், கொச்சியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 14 ஆவது தளத்தில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம், வீட்டில் மருத்துவர் ரேஷ்மா ஆபிரகாம் வீட்டில் தனியாக இருந்த நிலையில், வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று 14 ஆவது தளத்தில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு பதறிப்போன குடியிருப்பு வாசிகள் கீழிறங்கி வந்த நிலையில், தரைத்தளத்தில் உடல் சிதறி ரேஷ்மா பலியாகி இருக்கிறார். இந்த விசயம் தொடர்பாக கொச்சி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ரேஷ்மா ஆபிரகாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடந்து வருகின்றனர்.