மலைப்பகுதியில் ஹில்ஸ் ரைடரை தள்ளிவிட்டு கொன்ற பாறாங்கல்.. உருண்டு வந்து பகீர்.. ஒருவர் பலி.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!

மலைப்பகுதியில் ஹில்ஸ் ரைடரை தள்ளிவிட்டு கொன்ற பாறாங்கல்.. உருண்டு வந்து பகீர்.. ஒருவர் பலி.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!


kerala-biker-died

இருசக்கர வாகனத்தில் ரைடிங் செய்தவர்களை பாறாங்கல் தாக்கி ஒருவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அபினவ் (வயது 20), அனீஸ் (வயது 21) உட்பட 6 பேர், மலப்புரத்தில் இருந்து வயநாடு நோக்கி இருசக்கர வாகனத்தில் மலைப்பகுதியில் பயணம் செய்துகொண்டு இருந்தனர். 

அப்போது, அபினவ் மற்றும் அனீஸ் ஆகியோர் வாகனத்தில் செல்கையில், மலைப்பகுதியில் மேலே இருந்து கீழே உருண்ட பாறை இவர்களின் வாகனத்தை மோதி இருக்கிறது.

எதிர்பாராத சூழலில் நடந்த விபத்தில் அபினவ் மற்றும் அனீஸ் ஆகியோர் 100 அடி பள்ளத்தில் விழுந்தனர். மேலும், அபினவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். அனீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த பரபரப்பு சம்பவம் கடந்த 16 ஆம் தேதி நடைபெற்றதாக தெரியவரும் நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.