65 வயதில் கணவரின் 67 வயது நண்பனை திருமணம் செய்து கொண்ட லட்சுமி அம்மாள்..! நெகிழ்ச்சி சம்பவம்!kerala-65-years-old-lakshmi-married-husband-friend

கேரளா திருச்சூரை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள். இவரது கணவர் ஜிகே கிருஷ்ணா ஐயர். சமையல் தொழில் செய்து வந்த கிருஷ்ணா ஐயர் 21 ஆண்டுகளுக்கு முன்பு உடலநிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்  தனது உதவியாளரான கோச்சானியன் என்பவரை அழைத்து,  எனது மரணத்திற்கு பின்பு நீதான் என் மனைவியை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து லட்சுமி அம்மாள் மற்றும் கோச்சானியன் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அக்கறையும்,  தீராத அன்பும் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், ஏதோ சில காரணங்களால் இருவரும் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

Mystery

இதனை அடுத்து கேரளாவில் உள்ள முதியோர் இல்லத்தில் லட்சுமி அம்மாள் அவரது 65 வது வயதில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வயது முதிர்வின் காரணமாக கோச்சானியன்  சாலையில் மயங்கி கிடந்துள்ளார். அவரை கண்ட சமூக ஆர்வலர்கள் சிலர் அவரை மீட்டு லட்சுமி அம்மாள் தங்கியுள்ள அதே முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

இதனை அடுத்து லட்சுமி - கோச்சனியன் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்ட நிலையில் தங்கள் அன்பை மாறி மாறி பொழிந்துள்னனர். இவர்களது கதைதை கேட்ட முதியோர் இல்லம் இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தது.

Mystery

அதன்படி, இவர்களின் திருமணத்தை விமரிசையாக செய்ய கேரள அரசு திட்டமிட்டது. இதன்படி, அம்மாநில வேளாண் துறை அமைச்சர் சுனில் குமார் தலைமையில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் கோச்சனியன், லட்சுமி இருவரின் திருமணமும் நடைபெற்றது.

தனது 65 வயதில் தனது கணவரின் நண்பனை திருமணம் செய்துகொண்டது மகிழ்ச்சி தருவதாகவும், தற்போது தனக்கு ஒரு துணை இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் லட்சுமி அம்மாள் கூறியுள்ளார்.