கழுத்திலேயே கடித்த தெருநாய்; ரணமாக துடிதுடித்து பறிபோன 4 வயது சிறுமியின் உயிர்.. பதறவைக்கும் சம்பவம்.!Karnataka Raichur 4 Aged Minor Girl Dies after Dog Bite 

குழந்தைகள் வீட்டு வாசலில் தானே விளையாடுகிறார்கள் என அலட்சியமாக இருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை பாடம் என்பதை மறக்க வேண்டாம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டம், கோர்விகள் பகுதியில் வசித்து வருபவர் கீரலிங்கா. இவரின் மகள் லாவண்யா (வயது 4). சிறுமி கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். 

அச்சமயம் அங்கு வந்த தெருநாய் ஒன்று, விளையாடிக்கொண்டு இருந்த 8 சிறுவர்களையும் துரத்திகடித்து இருக்கிறது. நாயின் தாக்குதலில் சிறுமி லாவண்யாவின் கழுத்திலும் காயம் ஏற்பட்டது. 

இதையும் படிங்க: தொட்டிலில் உறங்கிய 5 மாத பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற நாய்; திறந்துகிடந்த வீட்டில் புகுந்து வெறிச்செயல்.!

மருத்துவ சிகிச்சைக்கு பின் நேர்ந்த சோகம்

இதனால் பாதிக்கப்பட்ட சிறார்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். பிற சிறார்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். லாவண்யாவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. 

பின் உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து சிறுமி நேற்று வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில், வீட்டிற்கு திரும்பிய சிறுமி சில மணிநேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: போதையில் நாயை அடித்தே கொலை செய்த நபர்; கட்டிவைத்து நாய்க்கு நடந்த பெருந்துயரம்.!