11 வயது மகளுடன் பெற்றோர் தற்கொலை: வெளிமாநிலத்தில் அறையெடுத்து கேரள தம்பதி விபரீத செயல்..!



Karnataka kodagu Family members Suicide 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு, மடிகேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரிசார்டுக்கு, வெள்ளிக்கிழமை இரவு 06 மணியளவில், தம்பதியினர் தங்களின் குழந்தையுடன் வருகை தந்துள்ளனர். 

இவர்கள் ஒருநாள் தங்குவதற்கு அறையெடுத்து தங்கிய நிலையில், அன்று இரவு வெளியே சென்றுவிட்டு உணவு சாப்பிட்டு பின் அறையில் உறங்கியுள்ளனர். மறுநாள் காலை 10 மணிக்கு அறையை விட்டு காலி செய்வதாகவும் கூறியுள்ளனர். 

மறுநாள் காலை 10 மணியை கடத்தும் தம்பதிகளின் அறையில் இருந்து எவ்வித அழைப்பும் இல்லை. இதனால் விடுதி ஊழியர் அறைக்கு சென்று கதவை தட்டியும் பலனில்லை. முதலில் அவர்கள் உறங்கலாம் என நினைத்தவர், நேரம் கடந்ததும் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துள்ளார். 

karnataka

அப்போது, தம்பதிகள் தூக்கில் சடலமாக தொங்குவதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின் மடிகேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, விரைந்து வந்த அதிகாரிகள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். 

அங்கு தம்பதிகள் சடலமாக தூக்கிலும், அவர்களின் மகள் படுக்கையிலும் பிணமாக கிடந்ததை கண்டுள்ளனர். பின்னர் இவர்களின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

விசாரணையில், கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியை சேர்ந்த தம்பதி வினோத் பாபுசனேன் (வயது 43), அவரின் மனைவி ஜிபி ஆபிரகாம், தம்பதிகளின் 11 வயது மகள் என்பது உறுதியானது. இவர்கள் கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை செய்வதாக கடிதத்திலும் எழுதி வைத்துள்ளனர்.