மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த நண்பனின் கழுத்தறுத்து இரத்தம் குடித்த பயங்கரம்.. நெஞ்சை பதறவைக்கும் கணவனின் செயல்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபள்ளாபூர், பட்லஹள்ளியைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி மாலா. விஜயும் அவரது நண்பரான மாரேஷும் துணி வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மாலாவுக்கும், மாரேஷுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துவந்துள்ளது.
இதுகுறித்து விஜய்க்கு தெரியவரவே ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றவர் நண்பருடன் வாக்குவாதத்தின் ஈடுபட்டுள்ளார். மேலும் இருவருக்கும் தகராறு ஏற்பட ஆவேசத்தில் இருந்த விஜய், மாரேஷை கீழே தள்ளி கத்தியை எடுத்து ஆட்டை அறுப்பது போல் கழுத்தை அறுத்துள்ளார்.
பின்னர் அவரது ரத்தத்தையும் குடித்துள்ளார். இதனை தொடர்ந்து அலறல் சத்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினர் மாரேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.