இந்தியா ஆன்மிகம்

கர்நாடகம்: கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேரை கொன்றது ஒரு தமிழ் பெண்ணா? வெளியான அதிர்ச்சித் தகவல்.!

Summary:

karnadakam amman kovil - tamil girl ambika

கர்நாடகாவில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியானார்கள். மேலும் 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இச்சதி செயலில் ஈடுபட்டது ஒரு தமிழ் பெண் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா என்ற அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு  முன்பு கோபுரத்தின் மீது கலசம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பிரசாதமாக பக்தர்களுக்கு தக்காளி சாதம் வழங்கபட்டுள்ளது. இந்த பிரசாதத்தை சாப்பிட்டவர்கள் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

15 பேர் பலி

பிரசாதத்தை சாப்பிட்ட  பக்தர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட 15 பேர் உடனடியாக பலியாகினர். மேலும் 90க்கும் மேற்பட்ட பக்தர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பூச்சிக்கொல்லி மருந்து

அதாவது கோவில் நிர்வாகத்தை கவனிப்பது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கோயில் நிர்வாகத்தை தங்கள் கையில் கொண்டு வர கோயில் நிர்வாகத்தின் மேலாளர் மாதேஷ் என்பவரின் மனைவி அம்பிகா கோவில் பூசாரி மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரிலும் விஷம் கலந்துள்ளார்.

இதனால் போலீசார் அவர்கள் இருவரையும் மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த சிலரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அம்பிகா தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும் மேலும் திருமணத்திற்கு பிறகு கர்நாடகாவிலேயே தங்கியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.


Advertisement