இந்தியா

பக்கத்துக்கு வீட்டுக்காரருடன் சண்டை! மகன்கள் செய்த பதறவைக்கும் காரியம்! சிசிடிவி காட்சிகள்.

Summary:

Jejewellery shop owner was attacked by his neighbour

உத்திரபிரதேச மாநிலத்தில் பக்கத்துக்கு வீட்டுக்காரருடன் ஏற்பட்ட சண்டையில் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் முசாஃபர்நகரில் சிவில் லைன் என்னும் பகுதியில் உள்ள பிரபல நகை கடை ஒன்றின் உரிமையாளருக்கும் அவரது பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கும் சில நாட்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் சண்டையாக மாற, பக்கத்துக்கு வீட்டுக்காரரின் இரண்டு மகன்கள் நகைக்கடை நடுத்துபவரின் கடைக்குள் புகுந்து அவரையும் அந்த கடையில் இருந்தவர்களையும் பயங்கரமாக தாக்கி அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து நாசம் செய்துள்ளனர்.

மேலும், கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த நகை கடைக்காரரை சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் மூன்றுபேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த காட்சிகள் கடையில் இருந்த CCTV கேமிராவில் பதிவாகி வைரலாகிவருகிறது. 


Advertisement