வேலையை ஆரம்பித்த சுப்பிரமணிய சுவாமி: மாணவி சோபியா விடுதலை புலியை சேர்ந்தவரா?

வேலையை ஆரம்பித்த சுப்பிரமணிய சுவாமி: மாணவி சோபியா விடுதலை புலியை சேர்ந்தவரா?


Is sofia related to ltt

நாட்டில் எந்த பிரச்சினை நடந்தாலும் அதை பற்றி வித்தியாசமான கோணத்தில் யோசித்து கருத்து கூறி வருபவர் சுப்பிரமணிய சுவாமி. அந்த வகையில் சமீபத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பா.ஜா.க தலைைவர் தமிழிசைக்கும் மாணவி சோபியாவிற்கும் நடந்த பிரச்சனை பற்றி சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ள கருத்து சர்சையை கிளப்பியுள்ளது.

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசை வருவதை பார்த்து, அதே விமானத்தில் பயணம் செய்த மாணவி சோபியா “பாசிச பாஜக ஒழிக” என்று முழக்கமிட்டார்.

விடுதலைப் புலிகள்

இதனால் அதிருப்தி அடைந்த தமிழிசை, தூத்துக்குடி விமானத்திற்கு வந்த உடன், விமானதுறை அதிகாரிகளிடம் மாணவி சோபியா செயலை கண்டித்து புகார் அளித்தார். பின்னார் மாணவி சோபியா கைது செய்யப்பட்டார்.

கருத்துரிமையை பறிப்பதாக இருக்கிறது என அனைவரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து சோபியாவுக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

விடுதலைப் புலிகள்

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி இதுகுறித்து பேசுகையில், ஆராய்ச்சி மாணவி சோபியா கனடாவில் படித்துவருவதால், அவர் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருக்கலாம். 

விடுதலைப் புலிகள்

ஏனென்றால் கனடாவில் இருக்கும் விடுதலை புலிகளை சேர்ந்த அதிக தமிழர்கள் இருக்கின்றனர். அவர்கள் தான் பாஜக-வை பாசிஸ்டு என்று அழைப்பார்கள். மேலும் மாணவி சோபியாவை கைது செய்தது சரியான செயல் என்றார்.

ஏற்கனவே இந்த விவகாரம் பெரிய பரபரப்பை கூட்டியுள்ள நிலையில், சோபியா குறித்து சுப்பிரமணிய சுவாமி தெரிவித்த கருத்து மேலும் இந்த விவகாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.